அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலக அளவில் முதலிடம்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலக வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இது உலக அளவில் ரசிகர்களை கொண்ட ஒரு  ஹாலிவுட் படம். இந்த படம் வெளியாகிய பொழுது  ரசிகர்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படம் உலக வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த படம் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தை முந்தியுள்ளது. அவதார் திரைப்படம் ஒரு புது உலகை நம் கண்முன் கொண்டுவந்து நம்மை பிரமிக்க வைத்தது.  அதே போல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்  மார்வெல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம். அதனாலேயே திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு திரையரங்கு நிறைந்து காணப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் வெளியான அன்றே இது வசூல் சாதனை படைக்கும் என்று  அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதே போல் தற்பொழுது இந்த படம் உலகளவில் வசூல் சாதனையில் முதல் இடம் பிடித்துள்ளது.