லூமினஸ் பவர் டெக்னாலஜிஸின் புதிய அறிமுகம் டியர்ரா சுவிட்ச்சுகள்

வீட்டு உபயோக எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனையில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் லூமினஸ் பவர் டெக்னாலஜிஸ், தொழில்நுட்ப அளவில் மேம்படுத்தப்பட்ட டியர்ரா என்னும் பெயரில் புதிய சுவிட்ச்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இது நுணுக்கமான மேம்படுத்தப்பட்ட பொறியியல் தொழில்நுட்பம், சிறந்த வடிமைப்பு மற்றும் அழகிய தோற்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த சுவிட்ச்சுகள் உலோகம் மற்றும் மர பாக்ஸ்களில் பொருத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ்கள் மேல் மூடப்படும் மூடிகள் மரம், உலோகம் மற்றும் கண்ணாடி போன்ற வகைகளில் விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தட்டையான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸ்களில் சுவிட்ச்சுகள், மின் விசிறி ரெகுலேட்டர்கள் மற்றும் டிம்மருடன் வெளி வந்துள்ளது. இவை மூன்றும் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல் மிகவும் சிறந்த வடிவமைப்புடனும் அழகாகவும் `தொழில்நுட்பத்தின் அழகு’ என்னும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நுகர்வோர்களின் தேவையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். டியர்ரா, 9 வண்ணங்களில் பல்வேறு பொருட்கள் கொண்ட கவர் பிளேட்டுகளுடன் வெளி வந்துள்ளது. இந்த கவர் பிளேட்கள் வீட்டை அலங்கரிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் வெளிவந்துள்ளது.

லூமினஸ், இந்திய வீடுகளின் தேவைகளை புரிந்து கொண்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளி வந்துள்ளது. இந்த பிராண்ட் முதல் முறையாக 2016-ம் ஆண்டு தனது முதல் சுவிட்ச்சை அறிமுகம் செய்தபோது அனைவராலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே உள்ள சோலியோ மற்றும் விவேஸ் மற்றும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியர்ரா ஆகிய சுவிட்ச்சுகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் உள்ளிட்ட  வண்ணங்களில்  விற்பனைக்கு வந்துள்ளன. லூமினஸ் மாடுலர் சுவிட்ச்சுகள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் அதன் வர்த்தகம் 50 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

புதிய சுவிட்ச்சை அறிமுகம் செய்து வைத்து பேசிய லூமினஸ் டெக்னாலஜிஸ் மூத்த துணைத் தலைவர் ஜிதேந்திர அகர்வால் கூறுகையில், லூமினஸ் டெக்னாலஜிசின் ஒவ்வொரு பொருளும் பார்ப்பதற்கு அழகாகவும், வேலை செய்வதில் சிறப்பாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வடிவமைப்பு சித்தாந்தத்துடன் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்களை நாங்கள் வடிவமைத்து வருகிறோம். அந்த வகையில் எங்களின் டியர்ரா, சுவிட்ச் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் வீட்டு எலக்ட்ரிக்கல் பொருள் வர்த்தகம் கடந்த 2018-ம் ஆண்டில் 40 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியர்ரா சுவிட்ச் எங்கள் வர்த்தகத்தின் வளர்ச்சியை இந்த 2019-ம் ஆண்டில் மேலும் அதிகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த துறையில் டியர்ரா வகை சுவிட்ச்சுகள் ப்ரீமியம் சுவிட்ச்சுகளில் ஒன்றாக இருக்கும்.இந்த நவீன சுவிட்ச் ரகங்கள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.