சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் நுண்ணறிவு மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். “புகை நமக்கு பகை”, “போதை பொருட்களை தவிர்போம்”, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் துறை ஆணையர் சுமித் சரண், சட்டம் ஒழுங்கு துனை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் சிறுது தூரம் பேரணியில் மாணவர்களுடன் கலந்து கொண்டனர். தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி.மைதானத்தில் நிறைவு பெற்றது. அங்கு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடத்தபட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பை வழங்கபட்டது. இந்நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, காவல்துறை ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.