சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக் மறுசுழற்சி…

பிளாஸ்டிக் என்றவுடன் முதலில் தோன்றுவது, ” பிளாஸ்டிக் ஒரு துரோகி ”

உலகில் தற்போது முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு. இதற்கு முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மக்காத பொருளாகும். இது சுற்றுசூழல் பாதிப்படைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு, பிளாஸ்டிக்கை தடை செய்து இருந்தாலும், இன்றும் ஒருசில இடங்களில் பயன்பாட்டில் தான் உள்ளது. ஆனால், பிளாஸ்டிக்கில் இருந்து நமக்கு மிகவும் பயனுள்ள பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சதிஷ் என்பவர் மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரின் கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் விமான ஏரிபொருளாக மாற்ற முடியும் எனவும் மூன்றடுக்கு செயல்முறைகள் மூலம் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்ற முடியும் என நிரூபித்துள்ளார்.

சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்கை மறுசுழற்சி மூலம் 400 லிட்டர் எரிபொருளாக தயாரிக்க முடியும். இது மிகவும் எளிமையான செயல்முறை எனவும் தெரிவித்தார். இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை என்றும் இதன் மூலம் தண்ணீர் வெளியாகாது என்றும் கூறியுள்ளார். அதே போல் இந்த செயல் வெற்றிடத்தில் ( vacuum ) செயல்படுவதால், காற்று மாசுபடாது என தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டிலிருந்து 50 டன் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றி உள்ளார். தற்போது இவரது நிறுவனம், 200 கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து தினசரி 200 லிட்டர் பெட்ரோலை தயாரிக்கிறது. உள்ளூர் நிறுவனங்களுக்கு, லிட்டர் ஒன்றுக்கு ரூ.40 – 50க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் உருவாக்கபட்ட நோக்கம், சுற்றுசூழலை பாதுகாப்பது மட்டுமே, வியாபார நோக்கத்திற்காக இல்லை என்று பெருமிதமாக கூறியுள்ளார். மற்ற தொழில் முனைவோர்கள் ஆர்வமாக இருந்தால் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

உலகில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுசூழல் பாதிப்பைத் தடுக்கலாம்.