150 அடி ஆழத்தில் பிறந்த நாள் குழந்தை

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த விழுந்த குழந்தையை மீட்கும் பணி 4 வது நாளாக நடைபெற்றுவருகிறது. அந்த குழந்தைக்கு இன்று 3 வது பிறந்தநாள்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது பக்வான் புரா கிராமதில் ஆழ்துளை கிணற்றில் கடந்த ஜூன் 6ம் தேதி மாலை 4 மணியளவில் தவறுதலாக விழுந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணறை கோணிப்பை மூலம் மூடப்பட்டிருந்ததால், அது அறியாமல் அதன் மேல் கால் வைத்ததால் தவறி விழுந்தது. இந்த கிணற்றின் ஆழம் 150 அடி. இது 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதால் தீயணைப்பு படையினர் மற்றும்  தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 25 பேரும், காவல்துறையினர் 400 பேரும், தேரா சச்சா சவுதா என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 200 பேரும், துணை ராணுவப் படையினர் மற்றும் கிராமத்தினரும் சேர்த்து சுமார் 700 பேருக்கும் மேற்பட்டோர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருபினும் இந்த குழந்தையை இன்னும் மீட்க முடியவில்லை. இந்தியாவில் எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளது. அனால் அதை வைத்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயாத நிலைதான் இன்று வரை இந்தியாவில் இருக்கிறது. ஒரு உயிரை காப்பாற்ற முடியாத அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தும் என்ன பயன். பல மைல் தூரம் உள்ள விண்வெளியில் உள்ள கோள்களுக்கு ராக்கெட் முலம் செயற்கை கோள்களை அனுப்பும் நம் நாடு, வெறும் 150 அடி ஆழதில் உள்ள ஒரு குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்பது வெறுக்கத்தக்க ஒன்றாகும்.

மேலும் குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றிற்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, கேமராக்கள் மூலம் குழந்தையின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து எந்த வித தகவலும் இல்லாத நிலையில் இன்று அக்குழந்தை தனது 3வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. குழந்தையின் நிலை குறித்து எந்த வித தகவலும் இல்லாததால் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.