சர்வதேச களத்தில் வெற்றிவாகை சூடிய ராமகிருஷ்ணா கல்லூரி

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சர்வதேச கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியானது (12creaTE 2019), உலக கண்டுபிடிப்பு அறிவுசார் காப்புரிமை சங்கம், மலேசிய கல்வி அமைச்சின் ஆராய்ச்சி & கண்டுபிடிப்பு சங்கம் மற்றும் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் சார்பாக மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இக்கண்காட்சியில் மலேசியா, இந்தியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, தைவான் மற்றும் சூடான் நாடுகளின் சார்பாக 1064 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இந்தியாவின் சார்பாக, கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எம்.பால்ராஜ் அவர்களின் தலைமையில் 17 மாணவ மாணவியர் மற்றும் 7 பேராசிரியர்கள் கொண்ட குழுகலந்து கொண்டு தமது 10 புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி 24 விருதுகளை வென்றது. இப்போட்டியில் கலந்துகொண்டதன் மூலமாக கல்லூரியின் வளர்ச்சியை உலகளாவிய அளவில் தெரியப்படுத்திய கல்லூரியின் முதல்வர் மற்றும் அவர்களது குழுவை, எஸ்.என்.ஆர்.சன்ஸ்.சாரிடபிள் டிரஸ்டின் அறங்காவலர் ஆர்.விஜயகுமார் மற்றும் துணை அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசாமி ஆகிய இருவரும் வெகுவாக பாரட்டினார்கள்.