உற்பத்தி திறன் குழுவின் சார்பாக தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு கோயமுத்தூர் உற்பத்தி திறன் குழுவின் சார்பாக கோவையில் நடைபெற்றது.

கோவை உற்பத்தி திறன் குழு மற்றும் தொழிலக பாதுகாப்பு அலுவலகம்  சார்பில்,  தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை உற்பத்தி திறன் குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற, இதனை  தமிழ்நாடு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளின் இணை இயக்குனர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். இதில் தொழிற்சாலை வளாகத்தில், விபத்துக்களை தவிர்த்தல், பாதுகாப்பாக பொருட்களை கையாளுதல், உற்பத்தி திறன் அதிகரித்தல், மின்சார பாதுகாப்பு மற்றும் அவசர கால நேரங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக விரைந்து செயல் படும் முறைகள் ஆகியவை  குறித்த சிறப்பு வகுப்புகளை துறை சார்ந்த நிபுணர்கள் எடுத்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் சேவை  சார்ந்த அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ‘விபத்திற்கு பெரிதும் காரணமாக அமைவது’  பாதுகாப்பற்ற செயலே, பாதுகாப்பற்ற சூழ்நிலையே, பாதுகாப்பற்ற மனநிலையே…எனும் தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.