கவனமாக இருங்கள் இல்லையெனில் கவலையில்லாமல் இருங்கள் – அலெக்சாண்டர் அமைதி, விருந்தோம்பல் ஆலோசகர்

சி.ஸ்.ஐ.பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரின் கேட்டரிங் சயின்ஸ் துறையில் வேல்டிக்டரி விழா இன்று சிறப்பாக  நடைபெற்றது. இதில் இத்துறையின் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருந்தோம்பல் ஆலோசகர்  அலெக்சாண்டர் அமைதி, கௌரவ விருந்தினராக கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜெமிமா வின்ஸ்டன் மற்றும் துறைத்தலைவர் எட்சன்  நிர்மல் கிர்ஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தொடக்கமாக மாணவன்.சாமுவேல் ராஜா  வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரின் முதல்வர், சிறப்பு விருந்தினரை வரவேற்றார். பின் அவர் மாணவர்களுடன் உரையாடலில்,  “நீ உன் பாதையை தேர்ந்தெடு, அதற்குள் ஓடு, யாரையும் கவனிக்காதே, உன் பாதையில் மட்டுமே உன் கவனம் இருக்க வேண்டும். அதே போல், அடுத்தவரின் பாதையில் செல்லாதே,  உன்னை யாருடனும் ஒப்பிடாதே, இதில் நீ முன்பு இருந்ததைவிட முன்னேறி இருப்பாய், அதில் சந்தேகம் வேண்டாம்” என்று  குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், கேட்டரிங் மாணவர்களுக்கு முகத்தில் இருக்கும் புன்னகை தான் முக்கியம். கடினமாக உழைப்பதைவிட ஸ்மார்டாக உழைக்க வேண்டும். ஒழுக்கம் என்பது உன் சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்வதல்ல, உன் திறமையை வைத்து மட்டுமே முடிவு செய்யப்படுகிறது, அதற்கும் மேலாக, நேரம் தவறாமை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும், அதற்கு சிறந்த வழி சமையல். கவனமாக இருங்கள் இல்லையெனில் கவலையில்லாமல் இருங்கள் என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

அதன் பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாணவராக சாமுவேல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கோப்பையும் சான்றிதலும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். இறுதியில் துறைத்தலைவர் எட்சன் நிர்மல் கிர்ஸ்டோபர் நன்றியுரை வழங்கினார்.