ஈசா கல்லூரி சார்பில் 11-வது 5எஸ் ஃபுட்பால் போட்டி தொடக்கம்

கோவை ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் 2 நாட்கள் நடக்கும் 11-வது 5எஸ் ஃபுட்பால் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. கோவை நவக்கரை சாலையில் உள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 11-வது ஈசா சாம்பியன் டிராபி 2019 5எஸ் ஃபுட்பால் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று தொடங்கிய இந்தப் போட்டிகள்,   2 நாட்கள் நடக்கிறது. கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில், மகுடத்தைச் சூடும் அணிக்கு ரூ. 6,000 பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 3,000-மும், 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 2,000 பரிசு தொகையாகவும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த 5எஸ் ஃபுட்பால் போட்டி தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரி தலைமை செயல் அலுவலர் அஜித், நிர்வாக அலுவர் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.