டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் விதைப் பந்துகள் தயாரிப்புப் பயிலரங்கம்

காரமடை  டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விதைப்பந்து தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தை கல்லூரியின் செயலர் சுந்தர் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர். வே.சுகுணா அவர்கள் முன்னிலை வகித்தார் . அவினாசி, ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி மற்றும் ரா.பத்மபிரியா ராமசாமி அவர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும்,  இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப்பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1300 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நட்புச்சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர்கள், கி. சின்னராஜ், அ.செந்தில்குமார் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.