விவசாயிகள் தினத்தை கொண்டாடிய வெஸ்டர்ன் காட்ஸ் மாணவர்கள்

வெஸ்டர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியின் இயற்கை மன்றம் சார்பில் சமீபத்தில் விவசாயிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல வகை காய்கறி விதைகளை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் தூவினர்.  இதன் தொடர்ச்சியாக எட்டிமடையில் உள்ள விவசாய தோட்டத்திற்க்கு களப்பயணமாக மாணவர்கள் சென்றனர். அங்கு தோட்டத்தில் விளையும் தென்னை, வாழை, வெங்காயம், அவரை, தட்டைப்பயிறு, தக்காளி, மிளகாய், கருவேப்பிலை ஆகிய காய்கறி மற்றும் பழங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் அழிக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதைத்தவிர விவசாயிகளுக்கு உதவியாக உள்ள கால்நடைகளின் பங்கு குறித்தும் விளக்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ‘விவசாயிகள் தின’ வாழ்த்துக்களை கூறினர். இவ்விழாவில் மாணவர்கள் உணவை வீணாக்க மாட்டோம், கோக் பெப்சி தவிர்ப்போம், இளநீர் மற்றும் பழச்சாறு அருந்துவோம் என உறுதிமொழி எடுத்தனர். தன்னார்வத் தொண்டர் ஓசை திரு. சையது வழிகாட்டுதலில் விவசாயிகள் தினத்தில் முக்கிய அம்சமாக பதிமூன்று தென்னை மரங்களும் ஒரு புங்கை மரமும் மாணவர்களால் நடவு செய்யப்பட்டது.