சிட்னி கடல்பகுதியில் முகமே இல்லாத மீன்

40 சென்டிமீட்டர் நீளமுள்ள முகமே இல்லாத மீனை ஆஸ்திரேலிய கடல் பகுதியில் ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரிலேயாவில் சிட்னியின் தென் கடல் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலின் அடிப்பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு வகையான வினோத மீன் அவர்களிடம் சிக்கியது. 

அந்த மீனை ஆய்வு செய்த போது, அந்த மீனுக்கு கண்கள் கிடையாது. செவுல் பகுதி பக்கவாட்டிலிருந்து பார்த்தால் தான் தெரிகிறது. வாய் பகுதி மீனின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மீன் போலல்லாமல் ஒரு சதை பிண்டம் போல் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மீன் 1873 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் காணக் கிடைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்லுயிர் பெருக்கம் குறித்தும் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் இதுபோன்ற மீன்களை வைத்து ஆராய முடியும் என்று இந்த ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.