இந்துக்களுக்கு துரோகம் விளைவித்த கேரளாவுக்கு கருப்பு பலூனை பறக்கவிட்டனர்

சபரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்கு துரோகம் விளைவித்த கேரள முதல்வரின் , தமிழக வருகையை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரி மலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலையில் செல்ல முயன்ற ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும் , காவலதுறையினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிலக்கல் பம்பை போன்ற பகுதிகளில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோசம் போடவும், பாடல்கள் பாடவும், கூட்டமாக செல்லவும் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் தென்னிந்திய முழுவதும் நடைபெற்றது. இதற்கு முக்கிய காரணம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் என இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் வருகின்ற 16 ஆம தேதி தமிழத்தின் முன்னால் முதலவர் , திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளா இருக்கிறார். சபரிமலை செல்வதற்கு மாற்று மதத்தினருக்கு அனுமதி அளிக்கக்கூடாது. 144 தடை உத்தரவை திரும்பபெற வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும்  பினராயி விஜயன்  தமிழகத்திற்கு வருகை தருவதை கண்டித்து திரும்பி போ பினராயி விஜயன் ( go back pinaray vijayan ) என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பாக சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் முன்பு பினராயி விஜயன் தமிழகத்திற்கு வரக்கூடாது எனபதை வலியுறுத்தி கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் பினராயி விஜயனை கண்டித்து கருப்பு கொடி காட்டி  கண்டனம் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.