மஹிந்திரா நிறுவனத்தின் 2024 எக்ஸ்யூவி 700  அறிமுகம்

இந்தியாவின் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், 2024 எக்ஸ்யூவி700 இன் அறிமுகத்தை  அறிவித்தது. இந்த 2024 எக்ஸ்யூவி 700, வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்துவதற்கான பிராண்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த அப்டேட் ஆனது ஏற்கனவே வெற்றி பெற்ற எக்ஸ்யூவி 700 பிராண்டிற்கு கணிசமான மதிப்பைச் சேர்க்கும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கி, வாடிக்கையாளர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

2024 எக்ஸ்யூவி 700 ஆனது அதன் பல்வேறு வண்ணத் தட்டுகளை மேம்படுத்துகின்ற நேர்த்தியான நபோலி பிளாக் வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது, இந்த அதிநவீன வண்ணம் கருப்பு நிற கூரை ரெய்ல்கள், ஒரு ஈர்க்கும் கருப்பு கிரில் மற்றும் கண்ணைக் கவர செய்யும் கருப்பு அலாய்களுடன் வெளிப்புறத்தை உயர்த்துகிறது. கூடுதலாக, ஒரு தனிப்பயனாக்கப்பட்ட தோற்றத்தை  விரும்புவோருக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் பாணியைப் பிரதிபலிக்கும் ஒரு கலவையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கின்ற வகையில்  நபோலி கருப்பு கூரையுடன் கூடிய  இரட்டை-தொனி வண்ண விருப்பம் கிடைக்கிறது, உள்ளே, ஏஎக்ஸ்7 & ஏஎக்ஸ்7எல் வகைகளில் கேபினின் ஆடம்பர உணர்வைச் சேர்க்கின்ற டார்க் குரோம் ஏர் வென்ட்கள் மற்றும் கன்சோல் பேசல் போன்ற மேம்பாடுகள் உள்ளன.

இந்த 2024 எக்ஸ்யூவி 700 இப்போது ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7எல் மாறுபாடுகளில் கேப்டன் இருக்கைகளை வழங்குகிறது, சௌகரியத்துடன் கூடிய ஆடம்பரத்தைத் தடையின்றி ஒருங்கிணைக்கின்றது, ஏஎக்ஸ்7ல் மாறுபாட்டில் முன்-வென்டிலேட்டட் இருக்கைகளுடன், ஓட்டுநர் அனுபவம் மற்றும் மதிப்புத்தன்மை ஆகியவற்றை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். பிரத்தியேகமாக ஏஎக்ஸ்7எல் -ல், ஒரு நினைவக செயல்பாட்டுடன் ஒரு வெளிப்புற ரியர்-வியூ கண்ணாடியின் ஒருங்கிணைப்பு, நவீன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்ற தனிப்பயனாக்கப்பட்ட வசதியின் அடுக்கைச் சேர்க்கிறது. அட்ரெனாக்ஸ் சூட் இப்போது மொத்தம் 83 இணைக்கப்பட்ட கார் அம்சங்களைக் கொண்டு வருகின்ற 13 கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இதில் ஃபர்ம்வேர் ஓவர்-தி-ஏர் திறன்கள், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தைப் போன்ற தடையற்ற மென்பொருள் புதுப்பிப்புகளைச் செயல்படுத்துதல், உள்ளமைக்கப்பட்ட இ-சிம்மைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.