மீன் பிடிக்கும் ரோபோ

லயன்ஃபிஷ் எனப்படும் மீனை கொண்டு புதுமையான சமையல் போட்டி பெர்முடாவில் நடத்தப்பட்டது.

தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து சமையல் போட்டியை நடத்தியது. இதற்காக ஆளில்லா ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ரோபோ கடலில் உள்ள லயன்ஃபிஷ்க்களை வேட்டையாடி கரைக்கு பிடித்து வந்து வியப்பை ஏற்படுத்தியது.

மற்ற மீன்களை அழித்துவிடும் தன்மை, லயன்ஃபிஷ்க்கு இருந்தாலும் உண்பதற்கு ருசியாக இருப்பதால் சமையல் போட்டியாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ரோபோ உதவியுடன் மீன்பிடித்து சமைத்தனர். லயன்ஃபிஷ்கள் பிடிக்கப்படுவதால் அறிய வகை மீன்கள் அழிக்கப்படுவது கட்டுப் படுத்தப்படுகிறது.