அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் சர்வதேச மாணவர் தினம்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவன வளாகத்தில் சர்வதேச மாணவர் தினம் மற்றும் அவினாசிலிங்கம் சர்வதேச மாணவர்களின் கல்வி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் அனைவரையும் வரவேற்றார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் தியாகராஜன் தலைமை உரை ஆற்றினார். அவர் தம் உரையில், சர்வதேச மாணவர்களின் தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கங்களை எடுத்துரைத்தார். மாணவர்களுக்கான எழுச்சியை நினைவுபடுத்தும் விதத்தில் நவம்பர் 17ஆம் நாளன்று கொண்டாடப்படும் நிகழ்வாகும்.

மேலும் அவினாசிலிங்கம் சர்வதேச மாணவர்களின் கல்வி மையமானது மாணவர்களின் நலனில் எதிர் கால ஆய்வுத் திட்டங்களை உருவாக்கவும் உதவக்கூடிய மையமாக அமையும்.

பல்கலைக்கழக மானியக் குழு மத்திய இணைச் செயலாளர் அர்ச்சனா தாகூர் தொடக்கவுரை ஆற்றினார். அவர் தம் உரையில் அவிநாசிலிங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி மையமானது மொழித் திறன்களை வளர்க்க உதவும்.

மேலும் பன்முக கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொள்ள உதவும் உலகமயமாக்கலின் மூலம் மாணவர்கள் கல்வி கலாச்சாரம் சார்ந்த வாழ்வியல் மதிப்புகளை கற்றுக்கொடுக்கும் கல்வி மையமாகத் திகழும் என்பதில் மாற்றமில்லை.

தொடர்ந்து தென் மண்டல பிரெஞ்சு மொழி கூட்டுறவின் செயலர் மற்றும் இந்திய பிரஞ்சு மையத்தின் தலைவர் இன்றைய சிறப்பு விருந்தினர் எரிக் பெட்ரோட்டல் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில்: பிரெஞ்சு மொழி முதன்மை மொழியாகவும் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள சமூகத்தினரும் பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். பிரஞ்சு மொழியை இரண்டாம் மொழியாக பேசுவோரும் உள்ளனர். மேலும் பிரெஞ்சு மொழியில் செல்வாக்கையும் உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அமைப்புகள் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி திகழ்கிறது என்று எடுத்துரைத்தார். மாணவர்கள் ஒவ்வொருவரும் மொழிக்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.