அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கோவை உப்பிலிபாளையம்‌ பாஸ்போர்ட் பதிவு அலுவலக வளாகத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களின்‌ முன்னிலையில்‌ நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பேலட் யுனிட் மற்றும் கண்ட்ரோல் யுனிட் இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்து ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவையில் தேர்தலுக்கு பயன்படுத்துவதில் 6618 பேலட் யுனிட் இயந்திரங்கள், 3332 கண்ட்ரோல் யுனிட் இயந்திரங்கள் தற்போது வந்துள்ளது. இதில் 5 சதவீத இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.