ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் பன்னாட்டு அளவிலான ஹென்றி ஹார்வின் எஜுகேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிறுவனமானது உலகளாவிய அளவில் மாணவியருக்குக் கருத்துரைகளை எழுதவும் வடிவமைக்கவும் பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு நிறுவனமான எம்.எஸ்.எம்.எல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தி ரைட்டர்ஸ் காஸ்மோஸ் என்ற அமைப்போடும் கல்லூரியின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலமாக இளம் எழுத்தாளர்களுக்கான மின் பதிப்புகளை வெளியிடும் பயிற்சியை கல்லூரி மாணவியர் பெறலாம். இவ்விரு நிறுவனங்களும் மாணவியரின் தொடர்புகொள்ளுதல் மற்றும் எழுத்தாற்றலை மேம்படுத்தத் தேவையான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவர் ஆனந்தி ஆகியோர் பங்கு பெற்றனர்.