ஒரே நாளில் 50 ஃபோக்ஸ்வாகன் டைகுன் கார்களை டெலிவரி செய்த ரமணி கார்ஸ்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய டைகுன் எஸ்.யு.வி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வாகன் கார்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இந்நிலையில் 50 ஃபோக்ஸ்வாகன் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்து ரமணி கார்ஸ் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ரமணி கார்ஸ் நிறுவனத்தில்  புதிய டைகுன் டெலிவரி திருவிழாவை செயல் இயக்குனர் சுதர்சன் மற்றும் இயக்குனர் சசிகுமார் தொடங்கி வைத்தனர்.

நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஃபோக்ஸ்வாகன் காரின் ஆரம்ப விலை ரூ.10.49 லட்சம் மட்டுமே. இதன் டி.எஸ்.ஐ என்ஜின் மிகவும் பிரசித்தி பெற்றது.

மேலும், 1800 பேர் ஒரே மாதத்தில் புதிய டைகுன் காரை முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.