பூபேஷ் குப்தாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு

கோவையில் தோழர் பூபேஷ் குப்தாவின் வாழ்க்கை வரலாறான ‘பொதுவுடமை இயக்கத்தின் புயற்பறவை’ எனும் நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் பெற்றுக்கொண்டார்.

இந்தியப் பொதுவுடைமை இயக்கம் கண்ட மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பூபேஷ் குப்தாவின், அரசியல் வாழ்க்கை வரலாற்றை திரட்டி வழக்கறிஞர் கே.சுப்ரமணியன் எழுதிய “பொதுவுடைமை இயக்கத்தின் புயற்பறவை “, தியாகச் செம்மல் கே . பாலதண்டாயுதத்தின் சிறைக்குறிப்புகள் கடிதங்களை தோழர் ரமணி தொகுத்துள்ள சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள் மற்றும் வழக்கறிஞர் சுப்ரமணியன் எழுதி நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள “இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் ” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்றது.

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட செயலாளர் ராஜன் வரவேற்புரையாற்றினார். இதில் பொதுவுடமை இயக்கத்தின் புயற்பறவை நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் பெற்றுக்கொண்டார். இதே போல சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள் நூலை, திருப்பூர் எம்.பி.சுப்பராயன் மற்றும் இந்தியன் கம்யூனிஸ்ட் சந்தித்த முதல் வழக்குகள் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டனர்.