மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண் 95க்குட்பட்ட லாயிட்ஸ் அவென்யூ பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 1.09 கிமீ தொலைவிற்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும் போத்தனூர் சாலை, கருணாநிதி நகரில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.