16.02 சதவீதம் வளர்ச்சியுடன் ப்ரிகால் நிறுவனத்தின் வருவாய் உயர்வு

வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ப்ரிகால் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் வருவாய் 2024-ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 10,847.66 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது  குறித்து ப்ரிகால் நிறுவனம் 2023-2024-ம் நிதி ஆண்டின் 2வது காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியின் அடிப்படையில் கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது செயல்பாடுகள் மூலம் வருவாய் 16.02 சதவீதம் அதிகரித்து 5,626.62 மில்லியனில் இருந்து 10,847.66 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதேபோல் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாயானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.10 சதவீதம் அதிகரித்து 698.68 மில்லியனில் இருந்து 1,363.73 மில்லியனாகவும், வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய மார்ஜின் 12.42 சதவீதத்தில் இருந்து 12.57 சதவீதமாகவும் வரிக்கு பிந்தைய லாபத்தைப் பொறுத்தவரை கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் 331.55 மில்லியனாக இருந்தது தற்போது 650.93 மில்லியனாக உயர்ந்துள்ளது.

2024-ம் நிதி ஆண்டின் 2வது காலாண்டில் வர்த்தக சிறப்புகள்- மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நடத்திய சப்ளையர் மாநாட்டில் சிறந்த ஆதரவிற்கான விருது வழங்கப்பட்டது. மேலும் 2024-ம் நிதி ஆண்டிற்கான சுய-சான்றளிக்கப்பட்ட சப்ளையர் என்ற அந்தஸ்தையும் அந்நிறுவனம் வழங்கி உள்ளது. சப்ளையர் நம்பகத்தன்மை கிளஸ்டர் திட்டத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விருது வழங்கி உள்ளது. பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி லைன் மற்றும் டிஸ்க் பிரேக் அசெம்பிளி லைன்களுக்கான சர்பேஸ்-மவுண்ட் தொழில்நுட்பத்தில் ப்ரிகால் நிறுவனம் முக்கிய முதலீடுகளைச் செய்துள்ளது.

செயல்பாடுகள் குறித்து ப்ரிகால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் கூறுகையில், எங்களின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் கிடைத்த ஆதரவு ஆகியவை எங்களின் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரும் காலங்களிலும் இதேபோன்று மேல்நோக்கிய வளர்ச்சி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்களின் உற்பத்தி திறன்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த நாங்கள் அது தொடர்பான முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மேலும் வலும் சேர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் எங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றன. எங்கள் பங்குதாரர்களுக்கு நல்லதொரு பலன்களை வழங்க வேண்டும் என்பதிலும் மேலும் இந்த நிதி ஆண்டை நல்ல வளர்ச்சியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.