Femi9 சானிடரி நாப்கின் விழிப்புணர்வு

பெண்களுக்காக, பெண்களே தயாரிக்கும் Femi9 சானிடரி நாப்கின் பிராண்ட் குறித்து மாரண்ண கவுடர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்கால் உருவாகும் தரமற்ற நாப்கின்களால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டி, அதிக உதிரப்போக்கு, மலட்டுத்தன்மை, அதிக வயிற்று வலி, அதிக தலைவலி, அலர்ஜி, எரிச்சல் போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

மேலும், மன உளைச்சலுக்குள்ளாகி குடும்பம் மற்றும் கல்வி கற்கும் இடங்களில் ஆரோக்கியமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கலந்த நாப்கின்களை தொடர்ந்து வருட கணக்கில் பயன்படுத்தும் போது இரசாயனங்கள் உடலுக்குள் ஊடுருவிச் செல்வதால் புற்றுநோய் மற்றும் ஏனைய பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.

இது குறித்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையை போக்க தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின், இரசாயனத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகிறது Femi9 நிறுவனம். அந்த வகையில், உமாமுரளி (கோயம்புத்தூர் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் ஆலோசகர்) தலைமையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாரண்ண கவுடர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளிடம் Femi9 சானிடரி நாப்கின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் இணைந்து நடத்தி வந்த Femi9 சானிடரி நாப்கினை அண்மையில் நடிகை நயன்தாரா தனது தொழிலில் புதிய வரவாக Femi9 எனும் பெயரில் சானிடரி நாப்கின் பிராண்டை இணைத்துக் கொண்டார்.

பிளாஸ்ட்டிக் இல்லாத எளிதில் மக்கக்கூடிய Femi9 சானிடரி நாப்கின் தயாரிப்பு குறித்துக் கேள்விப்பட்ட நயன்தாரா, ஆய்வக சோதனைகள் மேற்கொண்டது மட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக அதனை உபயோகித்துப் பார்த்த பிறகே சந்தை படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது ஒரு பிராண்ட் மட்டுமல்ல பெண்களின் வலிமை பெண்களின் ஆரோக்கியம் பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை பெருமிதம் கொள்கிறோம்.