சமீபத்தில் போடப்பட்ட சாலை சேதம் மக்கள் ஆவேசம் …!

கோவை புட்டுவிக்கி சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோட்டில் லாரி ஒன்று புதைந்து விபத்துக்குள்ளானது. திங்களன்று கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில் அந்த சாலை லேசாக சேதமடைந்திருந்தது. இந்நிலையில் அவ்வழியாக செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் முன்புற சக்கரம் சாலையில் புதைந்து சிக்கியது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சாலை தரமில்லாமல் போடப்பட்டதாலும் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாகவும் லாரி சிக்கி கொண்டதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தரமான சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.