ஆராய்ச்சியில் எண்ணற்ற சாதனை புரிந்தவர்; பாரதீய வித்யா பவனில் குலபதி முன்ஷி விருது!

கோயம்புத்தூர் பாரதீய வித்யா பவன் மையம், ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபாலுக்கு ‘குலபதி முன்ஷி விருது’ வழங்கியது.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டு முழுவதும் கலை, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை பாரதீய வித்யா பவன்நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் குலபதி டாக்டர் கே.எம்.முன்ஷியின் பெருமையை நிலைநிறுத்தும் நோக்கில், கோவை பகுத்தியில் தங்கள் துறையில் சிறந்த சேவைகள் புரிந்த சிறப்புமிக்க நபர்களுக்குக் ‘குலபதி முன்ஷி விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபாலுக்கு ‘குலபதி முன்ஷி விருது’ வழங்கியது.

பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். பிரிகால் லிமிடெட் நிறுவனர் விஜய் மோகன், கோவை சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர் கெசெவினு அரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கிருஷ்ணராஜ் வாணவராயர் ஜி.டி நாயுடுவின் அரிய கண்டுபிடிப்புகளையும், எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சி சாதனைகள் புறிந்ததை மாணவர்களிடம் எடுத்துரைத்து விளக்கினார்.

மேலும் , ஜி.டி.கோபாலின் அர்பனிப்பு, அவரின் தந்தை உடனான அவரின் பாலிய பருவம் குறித்து பேசினார்.பின்னர், பேசிய விஜய் மோகன், ஜி.டி.கோபாலுடன் தனது துறை சார்ந்த உரையாடல்கள், தாங்கள் மேற்கொண்ட துறை சார்ந்த புதுமைத்துவங்கள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜி.டி.கோபால்,” எனக்கு இந்த விருது வழங்கியிருப்பது மிகுந்த நெகிழ்வாக இருக்கிறது. கோவை நகருக்கு ஒரு தனித்துவம் உள்ளது.இங்கு, தொழில் துறை சார்ந்து பலதரப்பட்ட மக்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.இந்தியாவில் வேறு எந்த நகரத்திற்கும் இந்த தனித்துவம் கிடையாது என்றவர், இவ்விருதை வழங்கிய கிருஷ்ணராஜ் வாணவராயர்க்கும், அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தார்.

இவ்விழாவில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் உட்பட பிரபல தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.