தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 26 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் இந்த ஆண்டிற்கான டாக்டர். ராதாக்ருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவும்  நடைபெற்றது. கே பி ஆர் குழுமங்களின் தலைவர் கே பி ராமசாமி கலந்து கொண்டார்.  தமிழக ஊராக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியல் தேசிய கல்விக் குழு NCSC தலைவர் ரகுநாத் , கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதன்மை செயலர் நடராஜன், கல்லூரியின் முதல்வர் பொம்மண்ணா ராஜா , ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பாராட்டு அறிவிக்கையை வழங்கினார். இந்த மூன்று நாள் மாநாட்டில் தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்துக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற மையக்கருபொருளை கொண்டு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள், மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநில மாநாட்டில் வல்லுனர்கள் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் அவரது படைப்புகளும் இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர். மாநாட்டில் விஞ்ஞானிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எண்கள் தேசம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான் அமரவும் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விஞ்ஞானிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி இங்கர்சால், இந்திய வானியற்பியல் மையத்தின் கதிரவன், ஸ்டாலின் உள்ள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆண்டில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தமிழ்க் அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மற்றும் பல்வேறு விருதுகள் பெற்ற சிறந்த 11 ஆசிரியர்களுக்கான சிறப்பு விருந்தினர் அமைச்சர் எஸ் பி வேலுமணி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது பேசிய கே பி ஆர் குழுமங்களின் தலைவர் ராமசாமி, நல்ல ஆசிரியர்களால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும், நல்ல மாணவர்கள் தான் நேர்மையான, சிறந்த குடிமகன்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றும் தொழில் முனைவோர்களாகவும் வலரா முடியும். அதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், தூண்டுதலும் மிக அவசியம். சிறந்த ஆசிரியர்களை பாராட்டி கெளரவிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன் என கூறினார்.