இந்திய பெண்களுக்கு வரலாற்று சாதனைக்குரிய நாள் – வானதி சீனிவாசன்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளரைச் சந்தித்தார்.அதில் வானதி சீனிவாசன் பேசுகையில்,புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் நாள் சிறப்புக் கூட்டுத்தொடரில் பெண்களுக்குப் பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இட ஒதுக்கீடு மசோதாவை பா. ஜா. க தலைமையிலான அரசின் பிரதமர் மோடி தாக்கல் செய்து உள்ளார். இது இந்திய பெண்களுக்கு வரலாற்றுச் சாதனைக்குரிய நாளாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் இருக்கும் பெண்களுக்கு அரசியல் அமைப்புகளான பாராளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடை பிரதமர் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியாக்கி வருகின்றனர்.

ஒன்பது ஆண்டுகளாகப் பிரதமர் மோடியின் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளான கழிப்பிடம், சமையல் எரிவாயு, வீடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்று குறுகிய காலத்திலே கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கான தலைமைப் பண்பு அவர்களுடைய பங்களிப்பு என்பது, வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக, பெண்களுடைய கல்வி, பொருளாதார முன்னேற்றம், மற்றும் பெண்களுக்கு எதிராகக் காலம் காலமாக, நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சமூக கொடுமைகள் குறைந்து வருவது என பல்வேறு மாற்றங்களை இதனால் பார்க்க முடியும். அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிற்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு,
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்.