மகளிர் உரிமைத்தொகை : இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த நா.கார்த்திக் exஎம்.எல்.ஏ

சிங்காநல்லூர் கோபால் நகர், துரைசாமி லேஅவுட் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் (1,06,50,000) மகளிருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பற்றிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வீடு, வீடாகச் சென்று வழங்கினார்.

பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதி சபரி தன்ராஜ், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், கோவை மாநகர் மாவட்ட இளஞரணி அமைப்பாளர் தனபால், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோர்.