தேசிய அளவிலான போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

இந்திய தொழில்நுட்பக் கழகம் கவுகாத்தி நடத்திய டெக்நிசே’23 என்ற தேசிய அளவிலான போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் ஏவியேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ் கிளப் சார்பாக மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்திய அவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்றனர்.

பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய ‘அகுவாவார்’ பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் கே.பி.ஆர். கல்லூரி மாணவர்கள் வென்று அசத்தினர். ‘ஸ்கை ஸ்பிரிண்ட்’ பிரிவிலும் 2ம் இடம் பிடித்து நிலையான ஒரு அடையாளத்தை நிறுவினர்.

மேலும் ‘எஸ்கலேட்’ பிரிவில் முதல் இடத்தையும், ‘டிராக் டைட்டன்’ என்ற பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இப்போட்டியில் தனுஷ் குமார், வேதிகா, விஸ்வா மற்றும் பிரசன்ன குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாணவர்களை பேராசிரியர் அறிவழகன் வழிநடத்தினார். டெக்நிசே’23 இல் வெற்றிபெற்றோரை கல்லூரி முதல்வர் ராமசாமி வாழ்த்தினர்.