பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

பி எஸ் ஜி ட்ரஸ்ட் சார்பில் மாணவர் இல்லம் என்ற காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த இல்லத்தில் 82  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வருடந்தோறும் இவர்களுடன் பி எஸ் ஜி ட்ரஸ்ட் சார்பில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கோவையில் உள்ள பி எஸ் ஜி சர்வஜன பள்ளியில் மாணவர் இல்லத்தின்  குழந்தைகளுடன் தீபாவளிக்கு பண்டிகை கொண்டாடப்பட்டது .

 தீபாவளிக்கு அனைத்து குழந்தைகளுக்கு பி எஸ் ஜி ட்ரஸ்ட் சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது . குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். மாணவர் இல்ல  குழந்தைகளை அரவணைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பி எஸ் ஜி ட்ரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.