இறுதிக் கட்டத்தை நெருங்கியது சந்திரயான் 3 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திராயன்-3 என்கிற விண்கலத்தை நிலவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்துள்ள இவ்விண்கலம் தற்போது நிலவை நெருங்க தொடங்கியுள்ளது.

சந்திராயன்-3 விண்கலம் நிலவை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டயுள்ளது. அதாவது சந்திராயன்-3 பூமியை நீள் வட்ட பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்ட பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் வகையில், பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து வந்த சந்திராயன்-3 விண்கலம் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் பயணித்து வருகிறது. இதற்கிடையே சுற்று பாதையின் தொலைவை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து லேண்டர் கலன் வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது. தற்போது இவ்விண்கலம் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யவுள்ளது.

மேலும், விண்கலத்தின் உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் 23 ஆம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ரோவர் எனப்படும் வாகனம் லேண்டர் கலனுக்குள் இடம்பெற்றுள்ளது. இது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின் நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யவுள்ளது.

இதுவரை, அணைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி செயல்படுத்துகின்ற இஸ்ரோ அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.