ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ப்ரவுட் நாலெட்ஜ் சொல்யுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமிடையே வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் மற்றும் ஸ்ப்ரவுட் நாலெட்ஜ் சொல்யுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் செந்தில் குமார் கையெழுத்து இட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விருந்தினர் விரிவுரைகள், கருத்தரங்குகள், சமீபத்திய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பரிமாற்றம், மற்றும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி பட்டறைகள், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் 4000 மாணவ மாணவிகள் மற்றும் 150 ஆசிரிய ஆசிரியைகள் பயன் பெறுவர்.

மேலும் அன்றைய தினம் தகவல் தொழில்நுட்பத் துறையின் அஸோசியேஷன் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்வில் அஸோசியேஷன் மாணவ தலைவராக ஹரிஷ் பாண்டி, துணை தலைவராக மஹாலட்சுமி, செயலாளராக ரம்யா, பொருளாளராக ஹரிப்ரசாத் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ருஜுல ஹர்ஷினி மற்றும் சக்கரை முகமத் ஆகியோர் பதிவியேற்று கொண்டனர். அதன் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்த பயிற்சி பட்டறையை தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் சந்தியா, வினோத், பிரகாஷ், மாலதி, வாணி, கலைவாணி, கயல்விழி, கோபி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.