ராயல் கேர் மருத்துவமனையின் தலைவருக்கு ‘வான்முகில் தொண்டர் விருது’

கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், ராயல் கேர் மருத்துவமனை தலைவரும், உயிரின் சுவாசம் அறக்கட்டளையின் அறங்காவலருமான டாக்டர்.கே.மாதேஸ்வரனுக்கு ‘வான்முகில் தொண்டர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதினை கோவை மாநகர் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இவ்விழாவில் 47 ராயல் கேர் மருத்துவர்களுக்கு கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்க்காக “கோவிட் வாரியர்ஸ்” விருதுகள் ரேடியோ மிர்ச்சி சார்பில் வழங்கப்பட்டது.

காவல்துறை ஆணையர் பேசுகையில், உயிரின் சுவாசம் அறக்கட்டளை மூலம் 10 கோடி மரங்கள் 100 மாதங்களில் நடவு செய்து பசுமை மாவட்டங்களாகவும், இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றும் நோக்கில், இது வரை 45 லட்சம் மரங்கள் பொது மக்களுக்கு இலவசமாகவும், பொது இடங்களில் நடவு செய்தும் அடர்வனங்கள் அமைத்ததற்க்காகவும் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.