நேரு கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேசன் சார்பில் ஆண் அழகன் மற்றும் பெண்களுக்கான உடற்கட்டு போட்டி

கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேசன் சார்பில் கோவையில் மூன்றாவது முறையாக “ஓப்பன் ஸ்டேட் மாநில அளவிலான மிஸ்டர் அண்டு மிஸ் மசில் மேனியா 2018” ஆண் அழகன் மற்றும் பெண்கள் சிறந்த உடற்கட்டு போட்டி  கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆண் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜுனியர் பிரிவில் 60, 70 மற்றும் 80 கிலோ எடை பிரிவில் பங்கேற்றனர். 23 வயதுக்கு மேற்பட்டவர்கள் சீனியர் பிரிவில் 60, 70 மற்றும் 80 கிலோவிற்கு மேல் எடை பிரிவில் கலந்து கொண்டனர். பெண்கள் 40 முதல் 110 கிலோவிற்கு மேல் ஒரே பிரிவாக  பங்கேற்றனர். மேலும் இதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு சிறந்த உடல்கட்டு வீரர் போட்டியும் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்று மற்றும் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கல்வி குழமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனரும் தமிழ்நாடு பளு தூக்குவோர் சங்க மாநில துணைத் தலைவருமான திரு. அ. முரளிதரன் மற்றும் தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேசன் பொது செயலாளர் திரு. எஸ். ஜெகன்நாதன் ஆகியோர் வரவேற்று பேசினார். விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர். பி. கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. கே. பெரியைய்யா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கௌரவ விருந்தினராக வேர்ல்டு பிட்னஸ் பெடரேஷன் தலைவர் திரு. எஸ். எஸ். மணியன் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேசன் தலைவர் திரு. முகமது நிவாஷ், தமிழ்நாடு பளு தூக்குவோர் சங்க தலைவர் டாக்டர். என். பாஸ்கரன் மற்றும் தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத்தின் முதுநிலை துணைத் தலைவர், திரு. எஸ். நாகவடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.