‘இராணுவம் போன்று எந்நேரமும் எதற்கும் தயார் நிலையில் கே.ஜி. மருத்துவமனை’

அவசரகால சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறியதாவது,

‘திடீரென ஒருவர் மயக்கம் அடைந்து நினைவும் நாடித்துடிப்பும் இல்லாத சூழலில் 108 க்கு அல்லது கே.ஜி. மருத்துவ அவசர ஊர்தி 0422 2222 222 க்கு அழைக்க வேண்டும். பக்கவாதம், மாரடைப்பு, விபத்து போன்ற அவசரமான சூழலில் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த அவசரகால சூழலை கோல்டன் ஹவர் என அழைக்கிறோம்.

அடுத்த நாள் செல்வோம், மருந்தகத்தில் மருந்து வாங்கிக்கொள்ளலாம், அருகிலுள்ள சிறிய மருத்துவமனைக்குச் செல்வோம் என முடிவெடுப்பது தவறு. நமது உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை சிறியதா, பெரியதா, உயிருக்கு பாதிப்பா என தெரிந்துகொள்ள அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். இம்மாதிரியான சூழலில் அரசின் பெரிய மருத்துவமனைக்கோ அல்லது கே.ஜி. மருத்துவமனை போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.

கோல்டன் ஹவர் என்பது விபத்தோ, மாரடைப்போ, மூளை பக்கவாதமோ ஏற்பட்ட நேரத்திலிருந்து அடுத்த ஒரு மணி நேரம் ஆகும். அந்த நேரத்திற்குள் வியாதியைக் கண்டறிந்து சிகிச்சை ஆரம்பித்திருக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் புதிதாக குடிபெயர்ந்துள்ளீர்கள் என்றால் சிறந்த மருத்துவமனை எது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவசரகால கட்டத்தில் மருத்துவமனையைத் தேடுவது கடினமான ஒன்று.

இதுபோன்ற அவசரகாலச் சூழலுக்கு கே.ஜி. மருத்துவமனையில் கிருஷ்ணகுமார், செந்தில்குமார், அப்துல்காதர் என்ற மூன்று கிளினிக் மேனேஜர்கள் உள்ளனர். கிளினிக் மேனேஜர் என்பவர் மருத்துவரோ அல்லது செவிலியரோ கிடையாது. ஆனால் அவர்கள் வைத்தியம் செய்வதற்கான தகுதி உடையவர்கள். எங்களுடைய இந்த மூன்று கிளினிக் மேனேஜர்களுக்கும் 10 வருடம் அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒரு மணி நேரத்தில், நோயாளி வந்ததும் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு,  ஈ.சி.ஜி.,  இரத்தம் போன்றவை சோதனை செய்யப்படும். விபத்து ஏற்பட்டவருக்கு உடனே CT ஸ்கேன் மார்புக்கும், மூளைக்கும், முதுகெலும்புக்கும் எடுக்கப்படும். நோயாளிக்கு எந்த இடத்தில் அடிபட்டது என அறிந்து உடனே சிகிச்சைகள் தொடங்கிவிடும். தலையில் அடிபட்டதற்கு சிகிச்சை அளிப்பதில் கே.ஜி. மருத்துவமனை சிறந்து விளங்குகிறது.

“East or west K.G. is the Best” கே.ஜி. மருத்துவமனையில் தலையில் அடிபட்டதற்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு 45 வருடம் அனுபவம் உள்ளது. இதுவரை இங்கே சுமார் 1.5 லட்சம் பேருக்கு தலையில் அடிபட்டதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தலையில் அடிபட்டால் உடனே சிகிச்சை தொடங்க வேண்டும். சிகிச்சை செய்யும் ஒரு மணி நேரம் கோல்டன் ஹவர் ஆகும். அந்த ஒருமணிநேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் பிளாட்டினம் மினிட் ஆகும்.

அதேபோல, மாரடைப்புக்கு கே.ஜி. மருத்துவமனையின் அவசர ஊர்தியிலேயே கிளினிக் மேனேஜரால் சிகிச்சை அளிக்கப்படும். அவசர ஊர்தியிலேயே சிறந்த மருத்துவம் கொடுக்கப்படும். பின்னர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர் வந்த உடனே அடைப்பு ஏற்பட்ட இடத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையும் நடைபெறும். கே.ஜி. மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு 30 வருடம் அனுபவம் உள்ளது. கே.ஜி. மருத்துவமனையில் 6 இருதய நோய் நிபுணர்களும் 5 இதய அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ளனர்.

கே.ஜி. மருத்துவமனையில் 24 மணி நேரமும் இரத்த வங்கியும் அவசர சிகிச்சைக்கு முன் எடுக்கப்படும் பரிசோதனைகளும் நடைபெரும். கே.ஜி. மருத்துவமனையில் 100 டாக்டர்கள், 100 தொழில்நுட்பநிபுணர்கள், 250 சிறந்த பயிற்சி பெற்ற செவிலியர்கள் உள்ளனர். இராணுவம் போன்று எந்தநேரமும் எதற்கும் தயார் நிலையில் கே.ஜி. மருத்துவமனையில் மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள். கே.ஜி. மருத்துவமனை சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்டது ஆகும்’ என்றார்

இந்தியாவில் அதிகமான உயிரிழப்புகள் நடக்கின்றன

அப்துல் காதர், சுவாச சிகிச்சை நிபுணர் மற்றும் கிளினிக்கல் மேனேஜர், கே.ஜி. மருத்துவமனை

பெரும்பாலும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் திடீரென உயிரிழக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைக்கு முக்கியமான காரணம், ‘கார்டியாக் அரெஸ்ட்’ (இருதய நிறுத்தம்). இந்த கார்டியாக் அரெஸ்ட் நிகழ்ந்தால் அந்த நபர் 4 நிமிடங்களில் உயிரிழக்க நேரிடும் என்கிறார் கே.ஜி. மருத்துவமனையின் சுவாச சிகிச்சை நிபுணரும் கிளினிக்கல் மேனேஜருமான M.அப்துல் காதர்.

மேலும் அவர் கூறுகையில், ’உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவு உயிரிழப்பு நமக்கு அறியாமல் வீட்டிலும் பொது இடங்களிலும் நடக்கிறது. ஒருவரின் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும்போது அடுத்த 4 நிமிடங்கள்தான் கோல்டன் மினிட்ஸ். நாம் அனைவரும் எந்த ஒரு நபருக்கு சுயநினைவோ, இதயத்துடிப்போ அல்லது மூச்சு விடுதலோ நின்றால் அடுத்த 4 நிமிடங்களில் அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்.

அந்த மாதிரியான சூழலில் முதலில் நாம் அவசர ஊர்தியை அழைக்க வேண்டும். பின்பு அந்த நோயாளி கார்டியாக் அரெஸ்ட் நிலையில்தான் உள்ளாரா என்று தெளிவுபடுத்தி, அவருக்கு நெஞ்சுப்பகுதியின் நடுவில் கைவைத்து விட்டுவிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்பு மூச்சு இல்லாத பட்சத்தில் செயற்கையாக நமது மூச்சுக்காற்றை கொடுக்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே அவர் உயிரிழக்காமல் காப்பாற்ற முடியும். அவசர ஊர்தி வரும் வரை காத்திருக்காமல் சி.பி.ஆர். என்ற இந்த முதலுதவியை செய்ய வேண்டும். இதனால் தற்காலிகமாக மூளைச்சாவு ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதற்கு பிறகு அவசர ஊர்தியில் வரும் துணை மருத்துவர் அந்த நோயாளிக்கு சுவாசம் தேவைப்படுகிறதா, இருதயத் துடிப்பு தேவைப்படுகிறதா, இரத்த அழுத்தம் தேவைப்படுகிறதா என்பதை அறிந்து அதிர்ச்சி சிகிச்சை (shock treatment) அளிக்க வேண்டுமென்ற பட்சத்தில் அதனை செய்வார். இதோடு சேர்த்து அந்த நபருக்கு மாரடைப்பு வந்திருந்தால் அதற்கான சிகிச்சை, விலா எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சை போன்ற முதன்மையான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்படும். இவ்வாறு செய்தால்தான் அவருக்குத் திரும்ப சுவாசத்தைக் கொண்டுவர முடியும். மேலும் அவருக்கு அவசர ஊர்தியில் சிகிச்சையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் தேவைப்படலாம்.

கார்டியாக் அரெஸ்ட் மாரடைப்பிலேயே அதிகம் காணப்படுகிறது. ஒரு சிலருக்கு அறிகுறியோடும், ஒரு சிலருக்கு அறிகுறி வராமலேயே மாரடைப்பு வரும். சில சமயங்களில் மக்கள் காய்ச்சலை அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். ஆனால் அதுவே நிமோனியா காய்ச்சலாக இருந்து அவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படுத்திவிடுகிறது. தற்போது இந்த மாதிரியான சூழ்நிலைகளில்தான் கார்டியாக் அரெஸ்ட் அதிகமாக ஏற்படுகிறது.

மாரடைப்பு எந்த வயதிலும் வரலாம். அதனால் மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் அருகிலேயே ஈ.சி.ஜி. சோதனை செய்யும் இடங்களில் சென்று சோதனை செய்வது நல்லது. அது மாரடைப்புதான் என அறிந்த பிறகு இருதய சிறப்பு மருத்துவமனைக்கு அல்லது கே.ஜி. மருத்துவமனையைப் போன்று அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துமனைக்கு உடனே செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்படும்போது லோடிங் டோஸ் எடுப்பது நல்லது. அதனால் மாரடைப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்’ என்றார்.

கோல்டன் ஹவரில் ஆம்புலன்ஸின் பணி

–  கிருஷ்ணகுமார், கிளினிக்கல் மேனேஜர், கே.ஜி. மருத்துவமனை

வீடு, அலுவலகம் என ஏதோ ஒரு இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் உங்களில் ஒருவரை ஆம்புலன்ஸில் அழைத்துக்கொண்டு, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பாதுகாப்பாக சேர்ப்பது எனது முக்கியமான பணி. கோல்டன் ஹவர் மட்டும் இல்லாமல் நோயாளிக்கு என்னவிதமான சிகிச்சை அளிப்பது, எந்த சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது என அவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதுவரை பார்த்துக்கொள்வதுதான் பணி.

ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி, உடல் முழுக்க வியர்ப்பது போன்ற தொந்தரவுகள் வரும்போது, உடனடியாக அவருக்கு ஓய்வுகொடுப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் உதவி. நடப்பது, ஓடுவது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. அமைதியாக அவரை ஓரிடத்தில் உட்கார வைக்க வேண்டும். இரண்டாவது, உடனடியாக ஆம்புலன்ஸை அழைப்பது.

மற்றொரு முக்கிய அனுபவக் குறிப்பு,  நெஞ்சு வலி ஏற்பட்டவருக்கு கழிவறை செல்ல வேண்டும் என்று தோன்றினால், அவரிடம் கழிவறையின் உள்தாழ்ப்பாளைப் போட வேண்டாம் என எச்சரிக்க வேண்டும். ஏனெனில், உள்ளே அவர் மயங்கி விழுந்தால் கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முனையும்போது, தேவையின்றி அவரின் உயிரைக் காப்பாற்றும் பொன்னான நேரம் வீணாகும். மேலும் சி.பி.ஆர் எனும் முதலுதவி குறித்து தெரிந்தால் அதனை செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸில் வரும் நாங்கள், உடனடியாக ஹார்ட் அட்டாக் வந்தவருக்குத் தேவைப்பட்டால் இசிஜி எடுப்பது, மருந்து கொடுப்பது, ஆக்ஸிஜன் கொடுப்பது என உயிர் காக்கும் முதலுதவிகள் செய்வோம். பின்னர், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்குத் தெரிவித்துவிடுவோம். உடனே அங்கு அவருக்குத் தேவையான அவசர சிகிச்சைப் பணிகள் துவங்கிவிடுவதால், நோயாளி மருத்துவமனை வந்தவுடன் உரிய சிகிச்சைகள் உடனே ஆரம்பிக்கும். இதன்மூலம் தேவையற்ற ஆபத்தான சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டு, அவரது உயிர் காப்பாற்றப்படும். வரும் வழியிலேயே ஒருவேளை இருதயம் நின்றுவிட்டால் ஷாக் கொடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளும் ஆம்புலன்ஸில் வரும் மருத்துவ உதவியாளர்கள் மூலம் செய்யப்பட்டு, அசம்பாவித சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடுவார்கள். இதுதான் கோல்டன் ஹவரில் ஆம்புலன்ஸில் பின்பற்றும் பணி.

லெவல் 1 ட்ருமா சென்டர்’ கே.ஜி.மருத்துவமனை

செந்தில்குமார், கிளினிக்கல் மேனேஜர்

கே.ஜி. மருத்துவமனையில் கடந்த 11 வருடங்களாக அவசர சிகிச்சை பிரிவில் கிளினிக்கல் மேனேஜராக பணியாற்றும் செந்தில்குமார் கூறியதாவது,

‘விபத்து ஏற்பட்ட அடுத்த 10 நிமிடத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சேர்ப்பதே எங்களுடைய முக்கியப் பணி. இதனை பிளாட்டினம் மினிட் என்று கூறுவர். அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் விபத்து அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில் பாதிக்கப்பட்டவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பதாகும்.

உயிர் போகும் தலைக் காயங்கள், உயிருக்கு ஆபத்து உண்டாக்கக்கூடிய முகம், தாடை, எலும்பு முறிவு, நுரையீரல் சேதம், இரத்தநாளங்கள் கிழிந்து அதிக இரத்தப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்ட அந்த உயிரை கொல்லக்கூடிய நிலையில் பிளாட்டினம் மினிட் என்பதை நாங்கள் எங்கள் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.

ஆம்புலன்சில், எ.பி.சி.டி. அணுகுமுறையைப் பின்பற்றி முதலில் மூச்சு விடுவதில் ஆபத்து இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்  (ஏர்வே), குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கதீட்டர் (Intravenous catheter) செலுத்தி தேவையான இரத்தம் மற்றும் குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு முதன்மை கவனிப்பில் முதலுதவி செய்து, அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்போம்.

கடந்த 45 ஆண்டுகளாக கே.ஜி. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ், இரத்த வங்கி, மருந்தகம், கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங், CT ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பிரிவு, ஆபரேஷன் தியேட்டர், கேத் லேப் எனப் பலதரப்பட்ட  மருத்துவக் குழு, அவசர சிகிச்சை மருத்துவர்கள், தீவிர சிகிச்சை மருத்துவர்கள், பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் 24×7 மணி நேரமும் எங்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறார்கள். அதனாலேயே கே.ஜி.மருத்துவமனை ‘லெவல் 1 ட்ருமா சென்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

ஸ்கூப் மற்றும் ரன் என்பதைக் கவனத்தில்கொண்டு பிளாட்டினம் மினிட்களைப் பயன்படுத்தி, விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து விபத்திற்கு உ ள்ளானவர்களை விரைந்து அழைத்துச்செல்வோம். மேலும் ஆக்ஸிஜன் முகமூடி, எண்டோட்ராஷியல் குழாய்கள், இருதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம், கார்பன் அளவு போன்றவற்றைக் காட்டும் மல்டி பாரா மானிட்டர் முதலிய முதன்மை தேவைக்கான கருவிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் எங்களது மருத்துவமனையில் உள்ளது.

அவசர நிலையில் என்ன செய்ய வேண்டும்?

விபத்திற்கு உ ள்ளானவர்களை முதலில் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பான, காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிறகு, 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொண்டு எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற சரியான தகவல்களை அளிக்க வேண்டும். மேலும், கே.ஜி. மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்தின் 0422 22 22 222 என்ற எண்ணைத் தொடர்புகொள்வதனால் 10 நிமிடத்திற்குள் விபத்து ஏற்பட்ட பகுதியை அடைய நாங்கள் முதன்மை தருகிறோம்’ என்றார்.