இந்திய டுடே தரவரிசை பட்டியலில் 2வது இடத்தை பிடித்த என்.ஜி.பி. கல்லூரி

இந்திய டுடே அண்மையில் வெளியிட்ட 2023ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசைக் கணக்கெடுப்பில், டாக்டர்.என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பான் இந்தியா தரவரிசையைப் பெற்றுள்ளது.

டாக்டர்.என்.ஜி.பி. கல்லூரியின் தலைவர் நல்ல பழனிசாமி மற்றும் செயலர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில், அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த தரத்துடன் கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு வசதிகளை இடைவிடாமல் மேம்படுத்துவதன் மூலமாகவும், தொழில்துறை சார்ந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய பன்னாட்டு நிறுவனம் சார்ந்த மற்றும் திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தை வழங்குவதன் மூலமும் உலகத் தரத்திற்கு இணையாக கல்வியை வழங்கி வருகிறது.

மேலும் சமூக விழுமியங்கள், நல்ல மாணவர்களை உருவாக்கித் தருதல் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் இக்கல்லூரி கவனம் செலுத்தியும் வருகிறது. இதனால் என்.ஜி.பி. கலை கல்லூரிக்கு பல்வேறு தளங்களில் இந்திய டுடே தரவரிசைப் பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.

இக்கல்லூரி தரவரிசையில் ஐந்து, நான்கு மற்றும் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த 10 வளர்ந்து வரும் கல்லூரிகளின் பிரிவில் கலை, அறிவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையிலும் இடம் பிடித்துள்ளது. என்.ஜி.பி. கல்லூரி, கலை மற்றும் அறிவியல் பிரிவில், நகரம் சார்ந்து கோவை பகுதியில் 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த கல்லூரி வர்த்தகத்தில் 88வது இடம்,  கணினி பயன்பாடுகளில் 94வது இடம், வணிக நிர்வாகத்தில் 138வது இடம், உணவக மேலாண்மைப் பிரிவில் 57வது இடம். மேலும் பான் இந்தியா தரவரிசையையும் பெற்றுள்ளது. கல்லூரி நிர்வாகம் கல்வித் துறையில் சிறந்து விளங்குவதற்கான அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அனைத்து நிர்வாக அலுவலர்கள், புல முதன்மையர்கள் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றியை கல்லூரி நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.