அனன்யாஸ் நானா நானி  ஹோம்ஸ் – கிராண்ட் பஜார் 

கோவை, தொண்டாமுத்தூரில் அமைந்துள்ள அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் – பேஸ் 3இல் வெள்ளிக்கிழமை அன்று சீனியர் சிட்டிசென்களுக்கென பிரத்யேக பஜார் போடப்பட்டது. இது குறிப்பாக வயதில் மூத்தோர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை இருக்கும் இடத்திலேயே வாங்கி மகிழும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கார்மெண்ட்ஸ், மெத்தைகள், பாய்கள், வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஸ்னாக்ஸ் வகைகள், ஐஸ் கோலா, குல்பி, வீட்டுக்கு தேவையான அழகுசாதன பொருட்கள், பர்னிச்சர்கள், லைப் இன்சூரன்ஸ், சுற்றுலாதள ஏஜென்சிஸ், கேம்ஸ், டான்ஸ், கிஃப்ட் மற்றும் காவெரிங்ஸ் போன்ற ஸ்டல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸின் நிர்வாக இயக்குனர் உமா மஹேஸ்வரி கூறியதாவது, 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ். தற்போது 5 பேஸ்களில் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்கின்றனர். அதில் பலர் ஒய்வு பெற்ற முதியவர்களும் இருக்கின்றனர். அவர்கள் வெளியில் சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை சிரமப்பட்டு வாங்குவதைத் தவிர்ப்பதற்காகவும் அவர்கள் விரும்பிய பொருட்களை இருப்பிடத்திலேயே வாங்கி மாகிழ்வதற்காவும் இந்த கிராண்ட் பஜார் போடப்பட்டுள்ளது. உள்ளூர் விற்பனையாளர்கள் இதற்க்கு மிகவும் உதவிகரமாக உள்ளனர், என்றார்.

மேலும், இந்த பஜாரில் பலரும் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கியும், ஸ்னாக்ஸ், சாட் ஐட்டம்களை உண்டும் விளையாடி மகிழ்ந்தனர்.