2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் கல்வெட்டுக்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்து பெருந்துறை வட்டத்தைச் சார்ந்த குமரிக்கல் பாளையம் என்ற பகுதியில் இந்தியாவிலேயே மிக உயரமான நடுகல்லும் புதியதாக 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுடைய இறப்புச் சடங்குக்காக உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

எங்கள் மாணவர்களோடு அங்கு சரியாக பத்து மணிக்கு மேற்பரப்பாய்வில் ஈடுபட்டு அந்த சுடு மண் பொருட்களைச் சேகரித்து, வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த சங்க காலத்து மனிதர்கள் வாழ்ந்த வாழ்வியலையும் அவர்களது வரலாற்றையும் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத் திறன்களையும் ஆய்வு செய்ய இருக்கின்றோம். .

பேராசிரியர் ச.இ ரவி கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைப் பொறுப்பாசிரியர், மற்றும் தமிழ்த் துறைத் தலைவர், மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்