டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் 7-ந்தேதி  நீரிழிவு கண்காட்சி

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் “நீரிழிவு நோயை தோற்கடிப்போம்” என்னும் புதிய பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. இதன் அடிப்படையில் கோவையில் 7-ந்தேதி திருமதி பத்மாவதி அம்மாள் கலாச்சார மையத்தில் முதன் முறையாக பிரமாண்ட நீரிழிவு கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் நீரிழிவு தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மக்களுக்காக வழங்கப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் அனைவரும் பங்கேற்கலாம். இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. இதில் உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். மேலும் உணவு பழக்கவழக்கம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு டாக்டர்கள் தங்களது ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள்.

ஒரு நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீரிழிவு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், சுவையாக உணவு செய்யும் முறை, வினாடி வினா போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் யோகா மற்றும் உடற் பயிற்சி  குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட உள்ளது.  நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊக்கப்படுத்தவும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் “நீரிழிவு நோயை தோற்கடிப்போம்” என்னும் பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சிறப்பு விருந்தினர்களான பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் டாக்டர் ராமலிங்கம், பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவ துறை ஆராய்ச்சி பதிவாளர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோரால் நீரிழிவு தூதுவர்கள் கவுரவிக்கப்பட உள்ளார்கள்.

புகழ் பெற்ற பிரபலங்களான கேஜி மருத்துவமனை மற்றும் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, பிரிக்கால் நிறுவனத்தின் தலைவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் மற்றும் ஆர்விஎஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் லயன் `விஜயா ஷ்ரீ’ டாக்டர் கே.வி. குப்புசாமி    ஆகியோர் “லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்” என்னும் விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். ww.drmohans.com என்ற இணையதளம் மூலம் மருத்துவ ஆலோசனைகளுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம்.