ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையாளராக கலந்து கொண்டார். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், பல்வேறு திட்டபணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், மகளிர் திட்டமா, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய கூட்டப் பொருள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர், வடகிழக்கு, பருவமழை காலங்களில் ஊராட்சிகளில் உள்ள தாழ்வான பகுதிகள், கால்வாய், சிறுபாலங்கள் ஆகியவற்றில் குப்பைகளை தூர்வாரி சரி செய்து , மழைநீர் வெளியேற வடிகால் வசதியை சரி செய்ய வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டம் இருக்க வேண்டும்.திறந்த வெளி மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், உதவி இயக்குனர் பத்மாவதி, வட்டார வளர்சிசி அலுவலர்கள் ராஜேஸ்வரி, குழந்தைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.