தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் 25 சென்டி மீட்டருக்கு மேலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ரெட் அலர்ட் என்று அழைக்கப்படும் இந்த எச்சரிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை அனுப்பியுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுரை செய்யப்பட்டுள்ளது . அந்த தினம் அதிதீவிர மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் விடுத்துள்ள எச்சரிக்கையில், என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்து விட வாய்ப்பு உள்ளது என்பதால்தான் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலையின் போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கூடும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டி வரும்.