தமிழ்நாட்டில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக ஸ்டார்ட் புராடக்ட்களை சிஸ்கோ அறிமுகம் செய்து உள்ளது.

ஸ்டார்ட் புராடக்ட்களை சிஸ்கோ அறிமுகம் செய்து உள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் அடித்தளத்தை கட்டமைத்து உலக அளவில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை பெற முடியும். தமிழ்நாட்டில் தொழில் துறையில் டிஜிட்டல் மயமாதலை அதிகரித்து மாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்கோவின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.  முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ இந்திய மாநிலங்களின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு உதவி வருகிறது. மிகவும் வசதியான மற்றும் முற்போக்கான தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கி இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற சிஸ்கோ உதவுகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மயத்தை ஏற்படுத்தி அவற்றை எளிய பாதுகாப்பான உயர் தொழில் நுட்பங்களுடன் கூடிய நிறுவனங்களாக அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதே சிஸ்கோ ஸ்டார்ட்ன் நோக்கம். டிஜிட்டல் பயணத்தின் அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரியான அளவிலான சரியான விலையிலான தீர்வுகள் வழங்கப்படும். இன்றைய தேவைகளுக்கு ஏற்ப நாளை சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட வேலை திட்ட உற்பத்தி திறன் மற்றும் புதுமையை சிஸ்கோ வழங்குகிறது. சிஸ்கோ இந்தியா மற்றும் சார்கின் வர்த்தக விற்பனை பிரிவு மேலான் இயக்குனர் கதிர்நாயர்  கூறும் போது, சிஸ்கோவிற்கு தமிழ்நாடு முக்கிய சந்தையாகும். சிஸ்கோ ஸ்டார்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிக்கும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொருளாதாரத்தின் தூண்களாகும். டிஜிட்டல் சகாப்தத்தில் அந்த நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமாகும் என்றார். தமிழகம் டிஜிட்டல் தளத்தில் முன்னணி வகிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மேலும் கதிர் கூறினார். கடந்த ஓராண்டில் குறிப்பாக பிப்ரவரி 2017 ல், கோஸ்டார்ட் அறிமுகம் செய்யப்பட பின் புதிதாக சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்கள் 5ஆயிரம் பேரை சிஸ்கோ தளத்தில் கொண்டு வந்து உள்ளது.