15ஆயிரம் பேர் பங்கேற்க்கும் கோயம்புத்தூர் மாரத்தான்

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் அங்கீகரித்துள்ள வோடபோன் கோவை மாரத்தான் 6வது முறையாக கோவை ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவை கேன்சர் பவுண்டேசன் சார்பாக இந்த மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளதாகவும், புற்றுநோயை பரிசோதனை முகாம்களில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிதல், அதற்கான அறுவை சிகிச்சை அளித்தல், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆலோசனை அளித்தல் என பல்வேறு நிலைகளில் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இந்த மாரத்தான் போட்டியின் நோக்கம் என்று  இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தெரிவிக்கப்பட்டது. இப்போட்டி 21.1கி.மீ., தூரம், 10 கி.மீ., தூரம் மற்றும் 5கி.மீ., ஓட்டம், நடை என 3 வகையை உள்ளடக்கிய இந்த மாரத்தான் போட்டியில் வெற்றிப்பெருவோருக்கு பரிசுத்தொகையாக ரூ.2.5லட்சத்திற்கும் மேல், ஆண், பெண் என இரு பிரிவினருக்கும் தனியாக வழங்கப்படுவதாகவும், ஹாப் மாரத்தான் போட்டியில் பங்கேற்போருக்கு

முதல் பரிசு ரூ.25ஆயிரமும், 2ஆம் பரிசாக ரூ.15ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ.10ஆயிரமும், 10கி.மீ., ஓட்டத்தில் முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.15ஆயிரம், ரூ.10ஆயிரம் மற்றும் ரூ.5ஆயரம் பரிசாக வழங்கப்படவுள்ளது. முத்தோருக்கான ஹாப் மாரத்தான் பிரிவில், முதல் பரிசாக ரூ.15ஆயிரமும், 2ஆம் பரிசாக ரூ.10ஆயிரமும், மற்றும் 3ஆம் பரிசாக ரூ.5ஆயிரமும், 10கி.மீ., பிரிவில் முதல் 3 இடங்களுக்கு முறையே ரூ.10ஆயிரம், ரூ.7ஆயிரத்து 500, மற்றும் ரூ. 5ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் பாதை முழுவதும் போட்டியில் பங்கேற்போருக்கு உதவி மையங்கள், நீர் மையங்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வசதி, வழித்தட வழிகாட்டுவோர், முடிவுப்பகுதியில் களைப்பாற புத்துணர்வு பானம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 15ஆயிரம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தாண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருவோர் நேரடியாக தங்களின் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.