மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வுப் பணிகள்!

கோவை மாநகராட்சி, வசந்த் நகரில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் மழைநீர் வடிகால்களை தூர்வாரி, சாலைகளை சீரமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார். மேலும், தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, திருச்சி சாலையில் சம்பந்தப்பட்ட ஆக்கரமிப்புதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், உடன் மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி, உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் இளங்கோவன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் ஜெகதீஸ்வரி, கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.