தேர்தல் பயன்பாட்டிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை வந்தன.

வர இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த காவல் துறையினரின்  பாதுகாப்புடன் பெங்களூரில் இருந்து கோவை கொண்டுவரப்பட்டது.   பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து 7,370 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4000-கட்டுப்பாட்டு கருவியும் இன்று கோவை வந்தடைந்தன. வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் கோவை சுதாரத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தடைந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் முன்னிலையில், மின்னணு வாக்கு பெட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இயந்திரங்களுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தெற்கு வட்டாட்சியர் சியாமளாதேவி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடனிருந்தனர்.