கோவையில் இன்று முதல் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்.

கோவையில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தீவிர வயிற்றுப ்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

இந்தியாவில் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் வயிற்றுப் போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவுக்கு அடுத்தப்படியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சினை ஆகும். நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ‘இரு வார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டமானது கோவை மாவட்டத்தில் இன்று முதல் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் நடைபெறும்.

பொது சுகாதார துறை. பள்ளி கல்விதுறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த களப்பணி யாளர்கள் மற்றும் மேற்பா ர்வையாளர் கள் இந்த பணியில் ஈடுபடு வார்கள்.இம்முகாமில் அங்கன் வாடி பணியா ளர்கள் மற்றும் சுகாதார செவிலி யர்கள், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பயிற்று விப்பார்கள்.

ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தை கள் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஓஆர்எஸ் பொட்டலம் (குழந்தைக்கு ஒன்று வீதம்) விநியோகிப்பார்கள். மேலும், வயிற்றுப் போக்கு உள்ள குழந்தை களை கண்டுபிடித்து ஓஆர் எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்வார்கள். இத்திட் டத்தின் மூலம் ஐந்து வயதுக் குட்பட்ட 3.17 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.