மேயர் வார்டில் காத்தடித்தாலே கரண்டு போகுது !

மேயர் வெற்றி பெற்ற 19 ஆவது வார்டு பகுதியில் லேசான காத்து அடித்த உடனே கரண்ட் கட் ஆவதால் பொதுமக்கள் வியாபாரிகள் மாணவ மாணவிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றன.

கோவை வெங்கடேசபுரம், அண்ணா நகர், மணியக்காரன் பாளையம், ராக்காச்சி கார்டன், லட்சுமிபுரம் வடக்கு, தாகூர் வீதி, பாரதியார் ரோடு, மணியே கவுண்டன் புதூர், சுப்பநாயக்கன்புதூர், உடையாம்பாளையம், அண்ணா நகர், எஸ் ஆர் பி மில் உட்பட 19 ஆவது வார்டுக்கு உட்பட்ட பலபகுதிகள் உள்ளன.

இப்பகுதிகளில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. 19 -ஆவது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் மேகம் கருத்து லேசாக காத்தடித்தால் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. ஆதலால் தொழில் முனைவோர் மாணவ மாணவிகள் வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆதலால் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது:-

அவர்கள் கூறியதாவது

19ஆவது வார்டு விஐபி வார்டு என்றும் மேயர் அப்பகுதியில் வசிப்பதால் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். இப்போது பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

மேகம் கருத்து லேசா காத்து அடிச்சாலும் கரண்ட் போய்விடுகிறது. மேயர் வார்டில் ரோடுகள் குண்டும் குழியுமாக கெடக்கு. லேசா மழை பெய்தாலும் ரோட்டில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

குடி தண்ணீர் வாரத்திற்கு 2 முறை விடப்படும் என்றனர். ஆனால் இப்போது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட வருவது இல்லை. குடிதண்ணீருக்காக பலமுறை மறியல் போராட்டம் நடத்தி விட்டோம். மேயர் கல்பனா வெற்றி பெற்ற பிறகு வார்டின் குறைகளை கேட்க வரவே இல்லை என்று கொட்டி தீர்த்தனர்.

இதுகுறித்து கணபதி பகுதி அசிஸ்டன்ட் இன்ஜினியரிடம் கேட்டபோது:-

மின்வெட்டு ஏற்பட அதிக சாத்திய கூறுகள் பலத்த மழை, காற்றுடன் கூடிய மழை, இடி மின்னல் போன்றவைகள். மரக்கிளைகள் முறிந்து டிரான்ஸ்பார்மர் மேல் விழுவது இதன் காரணமாக மின்வெட்டு ஏற்படக்கூடும். அப்படி மின்வெட்டு ஏற்பட்டால் இரவு பகல் 24 மணி நேரமும் உடனே எங்கள் லைன் மேன் குழுவை அனுப்பி சரி செய்து விடுகிறோம் என்றார்.