கால்நடை படிப்பிற்கு 12ஆம் தேதி முதல் விண்ணப்பம்.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல் ,திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை ,தேனி வீரபாண்டி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன . திருநெல்வேலி, ஒரத்தநாடு, சென்னை, நாமக்கல்ஆகிய நான்கு கல்லூரிகளின் 420 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இது போக தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

இந்த சூழலில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12-ம் தேதி முதல் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் , பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள் , உணவு தொழில்நுட்ப படிப்பில் மூன்று இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் இரண்டுஇடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் மூன்று இடங்களிலும் மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.