கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சியில் உள்ள திருமகள் நகரில் மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணிகள் மேற்கொண்டதையும் , கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றதையும் , தூய்மை பணிகள் மேற்கொண்டதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருமகள் நகர் வீதிகளில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று குடிநீர் தடையின்றி வருகிறதா எனவும், மின் விளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம்  நேரில் கேட்டறிந்தார். பின்னர் மாநகராட்சிக்கு சொந்தமான முல்லைக்காடு  காலியிடத்தை பார்வையிட்டு இடத்தின் பராமரிப்பு குறித்து பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர், காந்திமதி, செயற்பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார், செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற் பொறியாளர் ஜான்சன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.