பெண்களுக்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் வியாழக்கிழமை கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமியை நேரில் சந்தித்து, அங்கு படித்துக்கொண்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை செய்வதைப் பற்றி கலந்துரையாடினார்.

பின்னர், கே.பி.ஆர். பெண் பணியாளர் கல்விப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் கோவை மைய ஒருங்கிணைப்பாளர்களையும் சந்தித்து பேசினார்.

மேலும் மில்லின் துணை தலைவர் சோமசுந்தரம், கார்மெண்ட்ஸ் துணை தலைவர் தனபால் மற்றும் கே.பி.ஆர். கல்விப்பிரிவின் தலைவர் சரவணபாண்டி ஆகியோர் துணை வேந்தருக்கு நன்றிகளை தெரிவித்தார்கள்.